அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்; நியூசிலாந்து பிரதமரிடம் ஆலோசனை கேட்ட அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருவதால், வன்முறையைக் கையாள்வது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

Update: 2022-06-01 17:10 GMT

வாஷிங்டன்,

துப்பாக்கி வன்முறை சம்பவங்களை சமாளிப்பது குறித்து நியூசிலாந்து பிரதமரின் ஆலோசனையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டறிந்தார்.

சமீபத்தில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமையன்று, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னிடம் ஆலோசனை கேட்டார்.

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், அதிபர் ஜோ பைடன் உடன் கலந்துரையாடினார்.அப்போது, அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருவதால், வன்முறையைக் கையாள்வது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

2019 இல் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டதை பைடன் குறிப்பிட்டு பேசினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நியூசிலாந்து அரசு ராணுவ பாணி துப்பாக்கிகளை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னிடம் அதிபர் ஜோ பைடன் பேசியதாவது, "காலநிலை மாற்றம் மீதான நடவடிக்கையை ஊக்குவிப்பதிலும் அதேபோல, வன்முறை, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான உங்களது உலகளாவிய முயற்சி உங்கள் தலைமை முக்கியப் பங்காற்றியுள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் ன்முறையைக் கையாள்வது குறித்து ஆலோசனைகளை பெற தயாராக உள்ளேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்