அமெரிக்காவில் கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது

அமெரிக்காவில் கொரோனா தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

Update: 2023-04-11 21:08 GMT

கோப்புப்படம்

வாஷிங்டன்,

கொரோனா தொற்று கடந்த 2019-ல் உருவாகி உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. வல்லரசு நாடான அமெரிக்காவையும் இது விட்டு வைக்கவில்லை. அங்கு லட்சக்கணக்கானோரின் உயிரை இது பறித்ததோடு பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கொரோனா அவசர நிலையை பிறப்பித்தார். இதனையடுத்து அந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் அந்த அவசர நிலை உத்தரவு காலாவதியானது. இதற்கிடையே அதனை முடிவுக்கு கொண்டு வர நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டு தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்