பீஜிங்கில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
சீன தலைநகர் பீஜிங்கில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.;
சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்தது. இதை தொடர்ந்து பீஜிங் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் மலழையர் பள்ளி தொடங்கி உயர் நிலைப்பள்ளி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில் பீஜிங்கில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.