வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் 37 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அறிவிப்பு

புதிய அமைச்சரவை நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.;

Update:2024-01-11 16:51 IST

டாக்கா,

வங்காளதேத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் வெற்றி பெற்றதை அடுத்து, 5-வது முறையாக அந்நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா தேர்வாகி உள்ளார். தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சி கைப்பற்றியது.

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் 37 பேர் கொண்ட புதிய அமைச்சரவை  நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

அமைச்சரவையில் பிரதமர் ஹசீனா, 25 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 11 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவை செயலாளர் மஹ்பூப் ஹொசைன் தெரிவித்துள்ளார்

இன்று இரவு ஜனாதிபதி அலுவலகத்தில்.நடைபெறும் விழாவில் ஷேக் ஹசீனா உட்பட புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்