சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு
கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீஜிங்:
சீனாவின் யுனான் மாகாணம், ஜாவோடாங் நகரில் உள்ள ஜென்ஜியாங் கவுண்டி மக்கள் மருத்துவமனையில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் நுழைந்த ஒரு மர்ம நபர், கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளான். இதனால் பார்வையாளர்கள், நோயாளிகள் என தப்பி ஓடினர்.
இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் விரிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.