சீனாவிலிருந்து வெளியேறிய ஆப்பிள் ஐபோன் நிறுவனம்... என்ன காரணம்?
சீனாவில் ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலையில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள் கொரோனா அச்சம் காரணமாக தப்பிச் சென்றனர்.
பெய்ஜிங்,
சீனாவின் செங்சூ நகரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலையில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள் கொரோனா அச்சம் காரணமாக தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், பாக்ஸ்கான் ஆலையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 ஆயிரம் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.