ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை கொலை செய்து உடலை திருடி புதைத்த பாதுகாப்பு படையினர்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த 17 வயது சிறுமியை கொலை செய்து உடலை திருடி புதைத்த பாதுகாப்பு படையினர்.

Update: 2022-10-05 10:57 GMT

தெஹ்ரான்:

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ஈரான் அரசு மற்றும் அதிபர் இப்ராகிம் ரைசிக்கு எதிராக திரும்பியுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி வருவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது.

செப்டம்பர் 20 அன்று தெஹ்ரானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற 17 வயது சிறுமி ஒருவர் மாயமானார் அவரது பெயர் நிகா ஷகராமி. அந்த சிறுமியை ஈரானிய பாதுகாப்புப் படையினர் கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவரது உடலில் அவரது மூக்கு உடைக்கபட்டு இருந்தது. மண்டை ஓடு சிதைந்து இருந்தது.

பின்னர் அவரது இறுதி சடங்கில் கூட்டம் கூடாமல் இருக்க அவரது உடலை திருடி ரகசியமாக புதைத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அதிகாரிகள் நிகா ஷகராமியின் உடலை கைப்பற்றி 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ரகசியமாக புதைத்துள்ளனர் என்று பிபிசி பாரசீக வட்டாரங்கள் தெரிவித்தன.




Tags:    

மேலும் செய்திகள்