அமெரிக்கா: சாகச நிகழ்ச்சியில் 2-ம் உலக போர் கால விமானங்கள் நடுவானில் மோதல்

அமெரிக்காவில் உலக போர் காலத்து விமானங்கள் இரண்டு நடுவானில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.;

Update:2022-11-13 06:36 IST



டெக்சாஸ்,


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படையின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற, பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறந்து சென்றன.

இந்த இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து சென்றபோது, நடுவானில் திடீரென மோதி விபத்தில் சிக்கின. இந்த சம்பவத்தில் போயிங் விமானத்தின் மீது சிறிய விமானம் இடதுபுறத்தில் மோதியது.

இரண்டு விமானங்களும் விபத்தில் துண்டுகளாக உடைந்து சிதறின. தொடர்ந்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. எனினும், விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இரண்டும் போர் விமானங்கள் வகையை சேர்ந்தவை. இதில், போயிங் விமானம், ஜெர்மனிக்கு எதிராக இரண்டாம் உலக போரில் வெற்றி பெற முக்கிய பங்காற்றிய 4 என்ஜின்கள் கொண்ட குண்டு மழை பொழியும் விமான வகையாகும்.

இவற்றில் மற்றொரு சிறிய விமானமும், போர் விமானம் ஆகும். இரண்டாம் உலக போரின்போது, தயாரிக்கப்பட்ட இந்த விமானம் சோவியத் விமான படையால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்