அல்ஜீரிய அதிபராக டெபோன் மீண்டும் தேர்வு

அல்ஜீரிய நாட்டின் அதிபராக டெபோன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-09-09 07:49 GMT

 அல்ஜியர்ஸ்

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் அப்துல்மஜித் டெபோன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையம் டெபோன் 94.7 சதவீத வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த அப்துல் ஹசானி 3.2 சதவீத வாக்குகளையும், சோசலிஸ்ட் அமைப்பை சேர்ந்த யூசுப் 2.2 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளனர்.

தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ள போதிலும் டெபோன் வெற்றியை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. 78 வயதான டெபோன் 2019 -முதல் அந்நாட்டில் அதிபராக இருந்து வருகிறார். எண்ணைய் வளம் கொண்ட அல்ஜீரியாவில் ராணுவ மந்திரி பொறுப்பையும் அவரே கவனித்து வருகிறார்.

இந்த முறை நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்குளில் 40 சதவீதம் மட்டுமே பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற ரஷிய அதிபர் தேர்தலில் புதின் 87 சதவீத வாக்குகளை பெற்றார். அவரை விட டெபோன் கூடுதல் சதவீத வாக்குகளை பெற்று இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்