கொலம்பியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ: அடர்ந்த புகை மண்டலத்தால் மக்கள் அவதி

கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகரில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது.

Update: 2023-08-20 05:31 GMT

கொலம்பியா,

மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகரில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் அங்கு வசித்து வரும் சுமார் 30,000க்கும் அதிகமான மக்களை, தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு, அம்மாகாண அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இங்கு நிலைமை மிகவும் மோசமாக மாறிவருகின்றது என்றும், தற்போது நாங்கள் சுமார் 30,000 பேரை வெளியேற்றும் உத்தரவின் நிலையில் உள்ளோம், மேலும் 36,000 பேர் வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் அவசரகால மேலாண்மை மந்திரி போவின் மா கூறினார்.

சுமார் 1,50,000 பேர் வசிக்கும் நகரமான கெலோவ்னாவில், மில்லியன் கணக்கான ஏக்கர்களை எரித்து சாம்பலாகியுள்ள அந்த காட்டுத்தீ, கனடா முழுவதும் பரவி வருகின்றது, இதனால் ஏற்படும் அடர்ந்த புகை மண்டலத்தால் மக்கள் பலர் மூச்சு திணறலுக்கு ஆளாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்