பிட்கெய்ன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலில் அமைந்த பிட்கெய்ன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பிட்கெய்ன்,
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்த தீவுகளில் ஒன்று பிட்கெய்ன் தீவு. இந்த தீவில் உள்ள ஆடம்ஸ்டவுன் பகுதியில் இருந்து 1,621 கி.மீ. கிழக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
எரிமலை தீவுகள் என அழைக்கப்படும் பிட்கெய்ன், ஹெண்டர்சன், டூசி மற்றும் ஈனோ ஆகிய 4 தீவு பகுதிகளை உள்ளடக்கியது இந்த தீவு. இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் வர கூடிய இதில் மிக குறைந்த அளவிலேயே மக்கள் வசித்து வருகின்றனர்.