பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற வேன் மீது லாரி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி

பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற வேன் மீது லாரி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலியாகினர்.;

Update:2023-09-16 21:44 IST

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் இருந்து ஒரு மினிவேன் புறப்பட்டது. அதில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்று கொண்டிருந்தனர். கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர். திருமணத்துக்கு சென்ற நிலையில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்