திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி
திபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீஜிங்,
சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில், தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவு, பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் தெரிய வந்தது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் அங்கு விரைந்துள்ளனர்.
நியிஞ்சி நகரமானது, பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.