ஐவரி கோஸ்ட்டில் கட்டிடம் இடிந்து 7 பேர் பலி
ஐவரி கோஸ்ட்டில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
அபித்ஜன்,
ஐவரி கோஸ்ட் நாட்டின் தலைநகர் அபித்ஜன்னில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அதன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது. இதனால், பணிய்ல இருந்த அனைவரும் நாலாபுறமும் தப்பியோடி உள்ளனர்.
எனினும், இந்த சம்பவத்தில் சிக்கி தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். 9 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஐவரி கோஸ்ட் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில், மழை காலத்தின்போது கட்டிட நடைமுறை பற்றிய விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது மற்றும் தரம் குறைந்த கட்டுமான பொருட்களை பயன்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இதனால், இதுபோன்ற கட்டிட விபத்துகள் ஏற்படுகின்றன.