தென் ஆப்பிரிக்காவின் ராணுவ பயிற்சி தளத்தில் தீ விபத்து; 6 பேர் உடல் கருகி சாவு

தென் ஆப்பிரிக்காவின் ராணுவ பயிற்சி தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

Update: 2023-10-07 16:47 GMT

தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கேப் மாகாணத்தில் ராணுவ பயிற்சி தளம் செயல்படுகிறது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பயிற்சி தளத்துக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென ராணுவ பயிற்சி தளத்துக்கும் பரவியது.

இதில் ராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்தன. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் இந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்த நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்