திமோரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

திமோரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-27 06:20 GMT

பீஜிங்,

திமோர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 4.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமோரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்