ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2024-04-08 14:03 IST

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மியசாகி மாகாணத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்சீன கடலில் ஒசுமி தீபகற்பத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 10.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மியசாகி மாகாணத்தின் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

முன்னதாக கடந்த புதன்கிழமை தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்