நைஜர் நாட்டில் 5 கிளர்ச்சியாளர்களை சுட்டு கொன்ற பிரெஞ்சு படைகள்

பிரெஞ்சு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நைஜர் நாட்டை சேர்ந்த 5 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

Update: 2023-08-12 20:36 GMT

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் முன்பு பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1960-ம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியது. எனினும் அங்குள்ள வளங்களை சுரண்டுவதற்காக ஒரு பொம்மை ஆட்சியை நிறுவி விட்டு பிரான்ஸ் சென்றது. இதன்மூலம் மின்சாரத்துக்கு தேவையான யுரேனியம் போன்றவை அங்கு சுரண்டப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் அதிபர் முகமது பாசுமை நைஜர் ராணுவம் சிறை வைத்தது. பின்னர் நாட்டில் ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர். மேலும் பிரான்ஸ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு நைஜரில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனை ஒடுக்குவதற்காக பிரெஞ்சு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நைஜர் நாட்டை சேர்ந்த 5 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்