வங்காளதேசத்தில் பயணிகள் ரெயில் தீப்பிடித்து விபத்து.. 5 பேர் பலி
ரெயிலின் 4 பெட்டிகள் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது.;
டாக்கா,
வங்காளதேசத்தின் மேற்கு நகரமான ஜெஸ்ஸோரிலிருந்து தலைநகர் டாக்காவிற்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயிலின் 4 பெட்டிகள் தீப்பிடித்தது.
ரெயில் திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், விரைந்து வந்து ரெயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
சிலரின் சதிச்செயலால் இந்தவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.