அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல்: ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிப்பு

அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

Update: 2022-07-14 00:23 GMT

மாஸ்கோ,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 130 நாட்களை கடந்தும் உக்கிரமாக தொடர்கிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்கான போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷிய படைகள் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள மைகோலைவ் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மைக்கோலைவ் நகரில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் ரஷிய படைகள் அதிநவீன ஏவுகணைகளை கொண்டு துல்லியமாக தாக்குதல் நடத்தியதில் 350 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே போல் மைக்கோலைவ் நகரில் உள்ள தற்காலிக ராணுவ முகாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 70 வீரர்கள் பலியாகினர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்