ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் அருகே மசூதியில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகத்திற்கு அருகில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-10-05 16:21 GMT

காபூல்,

காபூலில் உள்துறை அமைச்சகத்திற்கு அருகிலுள்ள மசூதியில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் நபி தாகோர் கூறுகையில், "உள்துறை அமைச்சகத்திலிருந்து தொலைவில் உள்ள ஒரு மசூதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. அங்கு பார்வையாளர்களும் அமைச்சகத்தின் சில ஊழியர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காபூல் உள்துறை அமைச்சகத்திற்கு அருகில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே உள்துறை அமைச்சக வளாகத்தில் உள்ள மசூதியில் வெடி விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் நபீ தாகோர் மறுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்