நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து 22 மாணவர்கள் பலி

பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-07-13 08:53 GMT

அபுஜா,

வட-மத்திய ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளியில் நேற்று வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, பள்ளியின் 2 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை இடிப்பாடுகளில் இருந்து உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டுள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அவர்களில் 22 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்றும், 132 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்