காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமி தந்தையிடம் சேர்ப்பு
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமி தந்தையிடம் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அமெரிக்க விமானத்தில் ஏற நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முயற்சித்தனர்.
அப்போது, ஒரு பெண் தனது குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆப்கானிஸ்தான் குழந்தை ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அந்த குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
WATCH: A small Afghan child was pulled over a wall to U.S. soldiers as large crowds gathered outside the Kabul airport. pic.twitter.com/eFjU1zst7l
— CBS News (@CBSNews) August 19, 2021