எலக்ட்ரான் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வி ராக்கெட் லேப் நிறுவனம் அறிவிப்பு
செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
நியூயார்க்,
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் ராக்கெட் லேப். இந்த நிறுவனம் ராக்கெட் உள்ளிட்ட விண்வெளி சாதனங்களை தயாரிப்பதோடு, செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனம் எலக்ட்ரான் என பெயரிடப்பட்ட இலகு ரக ராக்கெட் மூலம் தனது வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இது வரை தொடர்ச்சியாக 11 முறை எலக்ட்ரான் ராக்கெட் செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நியூசிலாந்தின் மாகியா தீபகற்பத்திலிருந்து எலக்ட்ரான் ராக்கெட் 7 செயற்கைக் கோள்களுடன் விண்ணுக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் புறப்படும் சமயத்தில் திடீரென ராக்கெட் செயலிழந்தது. இதனால் எலக்ட்ரான் ராக்கெட்டில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இது தொடர்பாக ராக்கெட் லேப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தோல்விக்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் 7 ராக்கெட்டுகளும் விரைவில் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.