வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
டாக்கா,
வங்காளதேச முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் மொத்தம் 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து 25 மாதங்கள் ஜெயிலில் இருந்தார்.
உடல்நிலை பாதித்ததால், மனிதாபிமான அடிப்படையில் கடந்த மார்ச் 25-ந்தேதி அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
நீரிழிவு, கை, கால் வலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றுவரும் கலிதா ஜியாவை, வாரம் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று டாக்டர்கள் பார்த்து வருகிறார்கள். அவர் நீண்டகாலம் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர் ஒருவர் கூறினார்.