ஆப்கானிஸ்தானில் 14 பேர் சுட்டுக்கொலை: தலீபான் அரசு கடும் கண்டனம்
டைகுந்தி மாகாணத்துக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பிரிவினரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தலீபான் பயங்கரவாதிகள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போதில் இருந்து அங்கு குறிப்பிட்ட ஒரு பிரிவினரை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த பிரிவை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் இருந்து டைகுந்தி மாகாணத்துக்கு ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு இடத்தில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் எந்திர துப்பாக்கிகளை கொண்டு அந்த வாகனத்தை சரமாரியாக சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 14 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.