பாகிஸ்தானில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,351 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,46,351 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-11 17:18 GMT
இஸ்லாமாபாத், 

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 2,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,46,351 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 5,123 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,53,134 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

அங்கு அதிகபட்சமாக  சிந்து மாகாணத்தில் 1,02,368 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 85,991 பேருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 23,569 பேருக்கும், அதேசமயம் ஒட்டுமொத்தமாக 15,38,427 பேருக்கும் கொரேனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது. 

மேலும் செய்திகள்