கொரோனா பரவலை தடுக்க மூன்று அடுக்குகள் கொண்ட முகக்கவசங்களை அணிய வேண்டும் - உலக சுகாதார நிறுவனம்
கொரோனா பரவலை தடுக்க மூன்று அடுக்குகள் கொண்ட முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஜெனிவா,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 70லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்த நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
* புதிய ஆராய்ச்சியின் அடிப்படையில், துணி முகக்கவசம் குறைந்தது மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.
* 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத இடங்களில் மருத்துவ முகக்கவசம் அணிய வேண்டும்.
* முகக்கவசத்தை அசுத்தமான கைகளைப் பயன்படுத்தி சரி செய்வதோ அல்லது மீண்டும் மீண்டும் கழற்றி மாட்டுவதோ கூடாது. இதனால் மக்கள் தங்களுக்கு தாங்களே தொற்றை பரப்பிக்கொள்கிறீர்கள் என்பதை உணர வேண்டும்.
* கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் பொதுவெளியில் மூன்று அடுக்குகள் கொண்ட துணி முகக்கவசங்களை அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.