யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.;

Update:2024-05-04 10:29 IST

கோப்புப்படம் 

கோவை,

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கரை கைது செய்து விசாரணைக்காக கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் சிறிய விபத்துக்குள்ளானது.

இதில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவைக்கு செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி பெற்ற பின்னர், கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றனர்.

கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளநிலையில், விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்