திட்டச்சேரி, டிச.20-
திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கங்களாஞ்சேரி சுடுகாடு பகுதியில் மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்து அங்கு மதுவிற்பனை செய்து கொண்டிருந்த 2 பேர் தப்பி ஓடினர். இதில் ஒருவரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் திருமாளம் தெற்குத் தெருவை சேர்ந்த தங்கையன் மகன் கண்ணன் (வயது 20) என்பதும், தப்பி ஓடியவர் கங்களாஞ்சேரியை சேர்ந்த தென்னரசு மகன் அய்யப்பன் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் திருவாரூர் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தும் தெரியவந்தது. இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து, அவரிடம் இருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பி ஓடிய அய்யப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.