ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-12-18 18:45 GMT

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று பாவூர்சத்திரம் புதிய காய்கறி மார்க்கெட் அருகே சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் சட்டவிரோதமாக 810 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டிவந்த ஆணைகுளம் ஊருணி தெருவை சேர்ந்த செல்லக்கனி (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரேஷன் அரிசியுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்