மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

திருவண்ணாமலை அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-27 13:55 GMT

திருவண்ணாமலை அருகில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவி ஒருவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி மாணவியை அவர் ஆசைவார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் மாணவி கா்ப்பமானதாக கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்