மணல் திருட்டில் தப்பிய வாலிபர் கைது

மணல் திருட்டில் தப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-22 19:18 GMT

காவேரிப்பாக்கம்,

மணல் திருட்டில் தப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அவளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்லின் கால்வாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டவர் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

போலீசார் மணல் கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தப்பியோடிய நபர் மாமண்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மகன் சின்னராசு (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து சின்னராசுவை அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்