நன்னடத்தை சான்றிதழ் பெறுவதற்கு போலீஸ் நிலையங்களில் குவிந்த இளைஞர்கள்

நன்னடத்தை சான்றிதழ் பெறுவதற்கு போலீஸ் நிலையங்களில் இளைஞர்கள் குவிந்தனர்.

Update: 2022-11-14 18:12 GMT

அக்கினி பதி திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்கான முகாம்காட்பாடியில் இன்று முதல் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள போலீசாரின் நன்னடத்தை சான்றிதழ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று நன்னடத்தை சான்றிதழ் பெறுவதற்கு போலீஸ் நிலையங்களில் இளைஞர்கள் குவிந்தனர்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அக்னி பத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு இரவோடு இரவாக அவர்களுக்கு நற் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான வாலிபர்கள் நேற்று இரவு கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதேபோன்று அணைக்கட்டு, பள்ளிகொண்டா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் இளைஞர்கள் குவிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்