குளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை
திருக்காட்டுப்பள்ளி அருகே குளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அருகே குளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
குளத்தில் குதித்தார்
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலம் கீழத் தெருவை சேர்ந்தவர் விமல் (வயது27) விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது தாயாரிடம் பணம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தான் சாக போவதாக கூறி அருகில் உள்ள கோவில் குளத்தில் குதித்து தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் குதித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விமலை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் விமல் உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து விமலின் தந்தை சத்தியமூர்த்தி (50) திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.