வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இளைஞர் திறன் திருவிழா

வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இளைஞர் திறன் திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2022-08-23 17:59 GMT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

அதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27-ந் தேதியும், வேப்பந்தட்டை ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதியும், பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதியும், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டவர்களுக்கு 17-ந்தேதியும், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது.

இவற்றில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, ஊரக பகுதிகளை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9444094325 மற்றும் 04328-225362 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்