இளைஞர் திறன் பயிற்சி முகாம்
குனிச்சி கிராமத்தில் இளைஞர் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.;
கந்திலி ஒன்றியம் குனிச்சி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அழகு தீனதயாள் உபாத்தியாயா பிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்கள் திறன் பயிற்சிகள் முகாம் நடைபெற்றது. மகளிர் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் எஸ்.வேதநாயகம், ஜேம்ஸ் பிரபாகரன், உமா, திட்ட விளக்க உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்து பேசினார் கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் ஜி.மோகன் குமார், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ. குணசேகரன், ஒன்றிய செயலாளர் முருகேசன், கூட்டுறவு சங்க இயக்குனர் வக்கீல் மாது, உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள் அனைத்து பயிற்சிகள் குறித்து தனித்தனியாக விளக்கவுரை அளிக்கப்பட்டது. முடிவில் உதவி திட்ட அலுவலர் முருகேசன் நன்றி கூறினார்.
இளைஞர் திறன் பயிற்சி குறித்து திட்ட அலுவலர் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து இளைஞர் திறன் பயிற்சியில் டிராக்டர் பழுது நீக்கும் பயிற்சி, தையல் பயிற்சி கேட்டரிங் பயிற்சி, ஏ.சி. பழுது நீக்க பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மென்ட், பிட்டர் எலக்ட்ரீசியன், அழகு நிலையம், ஆயத்த ஆடை, தோல் காலணினிகள் உள்பட பல்வேறு பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும். மேலும் சான்றிதழ் வழங்கப்பட்டு வேலை உத்தரவாதம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.