உறியடி விழாவில் பங்கேற்ற இளைஞர்கள்

செங்கோட்டையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த உறியடி விழாவில் இளைஞர்கள் பங்கேற்றனர்.;

Update: 2022-08-20 17:42 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் முன்பு கரையாளா் (யாதவர்) சமுதாய நலச்சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னா் கோவில் முன்பு சிறுவா், சிறுமிகளுக்கு பல்வேறு தனித்திறன் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கு கிருஷ்ணன்-ராதை வேடம் அணிந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனா். ெதாடர்ந்து பெண்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிளும், இளைஞர்களுக்கு உறியடி, வழுக்குமரம் ஏறும் போட்டியும் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் செங்கோட்டை நகராட்சி தலைவா் ராமலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், கலந்து கொண்டவா்களுக்கும் பரிசுகள் வழங்கினார். விழாவில் சமுதாய நலச்சங்க தலைவா் தங்கராஜன், செயலாளா் பால்ராஜ், பொருளாளா் கணேசன், நாட்டாண்மை சுப்பையா, பஜனைக்குழு தலைவா் மருதப்பன்கரையாளா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்