சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலி

சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலியானார்.;

Update: 2022-12-09 19:59 GMT

சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். திருமயம் அருகே உள்ள கோனாபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே செல்வம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்