மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.;

Update: 2023-06-07 19:13 GMT

திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவர் தீரன்நகர் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே கேபிள் வயர்களை இழுத்து கட்டும்போது அருகில் சென்ற உயர் மின் கோபுர கம்பத்திலிருந்து சென்ற மின்சாரம் ராஜா மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்