காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தெம்மாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 34). இவர் வயிரவன்பட்டியில் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் கடையின் அறிவிப்பு பலகையை மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் கம்பி மீது உரசியதில். தமிழரசனை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழரசன் உயிரிழந்தார். இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.