மது போதை தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு; டிரைவர் கைது
புதுப்பேட்டை அருகே மது போதை தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு; டிரைவர் கைது
புதுப்பேட்டை
புதுப்பேட்டை அருகே உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்தகுமார்(வயது 18). இவரும் அதே ஊரை சேர்ந்த லாரி டிரைவர் கருணா(28) என்பவரும் மது குடிப்பதற்காக மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனுர் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு போதை தலைக்கேறியதும் அந்த வழியே சாலையில் சென்ற பொதுமக்களிடம் கருணா தகராறு செய்துள்ளனர். அதை தடுக்க முயற்சித்தும் முடியாததால், லாரி டிரைவர் கருணாவின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வசந்தகுமார் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணா, வசந்தகுமாரின் வீட்டிற்கு சென்று எனது இருசக்கர வாகனத்தை நீ எப்படி எடுத்து வரலாம் என கேட்டு தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த வசந்தகுமார் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.