தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தேவதானப்பட்டி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-23 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ் (வயது 20). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தாய் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் பிரகாஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விஜய் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்