தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-03 22:19 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பூபதி (வயது 19). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பூபதி தான் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளுக்கு மாத தவணை கட்டுவதற்காக சேகரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே விரக்தி அடைந்த பூபதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்