தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டாா்

Update: 2023-07-21 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.வி.மங்கலம் ஊராட்சியில் உள்ள வாடத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் ரிஜீஷ் கல்யாண் (வயது 22). பேச்சிமுத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ரிஜீஷ் கல்யாண் தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை எஸ்.வி.மங்கலம் வடகாடு செடி பகுதியில் உள்ள வேலமரத்தில் ரிஜீஷ் கல்யாண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்