வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நாங்குநேரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-12-02 21:15 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே பிள்ளைகுளத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகன் பால்ராஜ் (வயது 27). கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தாயார் முத்துகனி கண்டித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மது குடித்து வந்த பால்ராஜை தாயார் கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த பால்ராஜ், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாங்குநேரி போலீசார் விரைந்து சென்று, பால்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்