குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது

குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-11-10 14:28 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் பணம் எடுக்க குடிபோதையில் வந்த நபர் ஒருவரின் ஏ.டி.எம். கார்டு எந்திரத்தில் மாட்டிக்கொண்டது. அதனை எடுக்க முயன்று இயலாத காரணத்தால் அந்த நபர் போதையில் தனது கைகளால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து உள்ளார். பின்னர் அங்கேயே போதையில் படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்று அங்கேயே போதையில் படுத்து தூங்கிய தனியார் தொழிற்சாலை ஊழியரான ஒடிசாவை சேர்ந்த அஸ்வின் நாயக் (வயது 26) என்பவர் மீது கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்