6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முத்துக்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் சேர்ந்து 6 கிலோ கஞ்சாவை சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே பிரித்துக்கொள்ள முயன்றபோது, போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில் அவர், சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்த முனுசாமி மகன் கோகுல்ராஜ்(வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.