போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சேர்ந்தமரம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-29 18:45 GMT

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கே.வி.ராமசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வில்சன்குமார் (வயது 21). இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இந்த நிலையில் அவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 2 முறை கர்ப்பம் ஆனதாகவும், அவரது பெற்றோருக்கு தெரியாமல் கர்ப்பத்தை அழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் ேபாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, வில்சன்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்