போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை அருகே உள்ள சொக்கநாச்சியார்புரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 25) இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராதா விசாரணை நடத்தி மதனை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தார்.